தியாகராய நகர் - Thiyagarayanagar

சென்னை: தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை அரசு உறுதி செய்யவும் - அன்புமணி

சென்னை: தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை அரசு உறுதி செய்யவும் - அன்புமணி

காவிரி பாசன மாவட்டங்களில் உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உரங்கள் தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நெற்பயிர்களுக்குத் தேவையான யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். நாட்டின் முதன்மைத் தொழிலான விவசாயத்திற்கு தேவையான உரங்கள் கூட தடையின்றி கிடைப்பதை தமிழக அரசால் உறுதி செய்ய முடியாதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் உரத்திற்கு எந்த தட்டுப்பாடும் இல்லை,  கூட்டுறவு சங்கங்களில் 32, 755 டன் யூரியா, 13, 373 டன் பொட்டாஷ், 16, 792 டன் டி. ஏ. பி, 22, 866 டன் காம்ப்ளெக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அந்த உரங்கள் எல்லாம் எங்கிருக்கின்றன என்பது தெரியவில்லை. அமைச்சர் குறிப்பிடும் அளவுக்கு உரங்கள் இருப்பு இருந்தால் காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு நிலவுவது ஏன்? என்பதை அரசு விளக்க வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி வெற்றிகரமாக அமைவதை உறுதி செய்ய தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


சென்னை