தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, டெல்லி கணேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “தமது இயல்பான நடிப்புத் திறனால், ஏற்றுக்கொண்ட அனைத்துக் கதாபாத்திரங்களிலும், மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி, உலகெங்கும் இருக்கும் தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற டெல்லி கணேஷ் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.