நெல்லை மாவட்டம் வள்ளியூர் அடுத்த தெற்கு கள்ளிகுளம் அதிசய பனி மாதா ஆலயத்தில் பாரம்பரியமாக பிரமாண்ட விருந்து நடைபெற்று வருகிறது. இதில், 700 கிலோவுக்கும் அதிகமான ஆட்டுக்கறி, ஒன்றரை டன் அரிசி, இரண்டு டன் காய்கறிகள் கொண்டு 10 சமையல் கலைஞர்களால் உணவுகள் செய்யப்பட்டன. சம்பாச் சோறுடன் ஆட்டுகறிக் குழம்பு மற்றும் குடல் பொரியல் உள்ளிட்டவற்றை பாத்திரங்களில் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.