சீனாவைச் சேர்ந்த ஜியோஜூன் என்பவர் ஜிலின் மகாணத்தில் வசித்து வருகிறார். ஏழ்மையானக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பணக்காரன் என்று பொய் சொல்லி திருமணம் செய்து கொண்டுள்ளார். உண்மை தெரிந்ததும் மனைவி இவரை வீட்டிலிருந்து விரட்டியடித்துள்ளார். இதே போல பொய்களை சொல்லி, அடுத்தடுத்து 3 கல்லூரி பெண்களை ஏமாற்றி இருக்கிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் மனைவி உட்பட ஏமாற்றிய பெண்கள் அனைவரையும் ஒரே குடியிருப்பில் வைத்து 4 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.