மழைக்காலம் அல்லது குளிர்காலத்தில் என்ஜின் ஆயில் உறைவதாலும், பேட்டரி பவர் குறைவதாலும் பைக் அவ்வளவு எளிதில் ஸ்டார்ட் ஆகாது. இதை சரி செய்ய இரண்டு எளிய தீர்வுகள் உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட்டை அழுத்தி அக்சிலரேட்டரை முறுக்க கூடாது. அதற்கு மாற்றாக கிக்கரை மிதித்து பைக்கை ஆன் செய்ய வேண்டும். இப்படி செய்யும் பொழுது இரண்டு அல்லது மூன்றாவது அழுத்தத்திலேயே பைக் ஆன் ஆகிவிடும். அதேபோல் சோக்கை திருப்பி விட்டு பைக்கை ஆன் செய்தால் உடனடியாக ஆன் ஆகிவிடும்.