பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் - முதல்வர்

66பார்த்தது
ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய் விளங்கும் என்பதையுணர்ந்து, பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், படிக்க உதவிட வேண்டும் என 2021-ஆம் ஆண்டு மாணவி ஷோபனா எனக்குக் கடிதம் எழுதினார். அவர் கல்லூரியில் சேரவும் படிக்கவும் உதவினேன். மூன்றாண்டுகளில் தனது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து, வேலைக்குச் செல்லும் அவரை அழைத்து வாழ்த்தினேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி