சமீபத்தில் இந்தியா முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மூடப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு காரணம் யுபிஐ மூலம் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து இருப்பது காரணமாக கூறப்படுகிறது. ஆர்பிஐயின் தரவுகளின் படி இந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு 15 என்கிற விகிதத்திலேயே ஏடிஎம்கள் உள்ளன. பரிமாற்றக் கட்டணங்கள், வங்கி விதிமுறைகள் காரணமாக மக்கள் யுபியை நோக்கி நகர்வதாக தெரிகிறது.