மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால் மகளிருக்கு மாதம் ரூ. 2100 வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளது. மாதம் ரூ.2100 வீதம் ஆண்டுக்கு மகளிருக்கு தலா ரூ.25,200 வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது. தேர்தல் அறிக்கையை அமித் ஷா வெளியிட்டார். சட்டமன்ற தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் முடிவுகள் நவம்பர் 23ஆம் தேதி வெளியாகும்.