விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூரில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (நவ 10) வருகைபுரிந்திருந்தார். அவரை வரவேற்பதற்காக மேடை அருகே 1000க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதல்வர் கிளம்பி சென்றவுடன், அந்த வாழைமரங்களில் இருந்த வாழைத்தார்களை பொதுமக்கள் போட்டிபோட்டு அள்ளிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.