குன்னம் - Kunnam

குன்னம்: மாற்றுத்திறனாளி மகளுடன் வந்து பெண் மனு

குன்னம்: மாற்றுத்திறனாளி மகளுடன் வந்து பெண் மனு

குன்னம் தாலுகா, ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்த இளையரா ஜாவின் மனைவி காசியம்மாள் (வயது 33). இவர் கைக்குழந்தை போல் காணப்படும் மாற்றுத்திறனாளியான 13 வயதுடைய மூத்த மகள் மெல்லிசை மற்றும் 2 மகள்கள், ஒரு மகனுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதில், எனக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எனது கணவரும் விபத்தில் சிக்கி வீட்டில் உள்ளார். மூத்த மகள் மாற்றுத்திறனாளி என்பதால் குடும்பத்தை காப்பாற்ற 10-ம் வகுப்பு வரை படித்துள்ள எனக்கு ஏதாவது அரசு வேலை வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

வீடியோஸ்


பெரம்பலூர்