அரசு பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

74பார்த்தது
அரசு பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்று 11. 11. 2024 -ம் தேதி தலைமையாசிரியர் கருணாநிதி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் தென்றல், One stop center மேகலா, மீரா ஃபவுண்டேஷன் நிறுவனர் ராஜா முகமது, களப்பணியாளர் மணிமாறன். ஆகியோர்கள் இணைந்து குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் போதையை ஒழிப்போம் என்று போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தி அதற்கான உறுதிமொழியை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு உதவி ஆய்வாளர் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மேலும் கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற உயிருக்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்களை உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை அருந்தி உயிரிழப்பவர்களின் குடும்பங்கள் படும் துயரங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி