தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி சந்திராபுரத்தை சேர்ந்த விவசாயி மாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று (நவ 11) பூனையின் சத்தம் கேட்டுள்ளது. அப்போது கிணற்றை எட்டிப்பார்த்தபோது பூனையுடன் சிறுத்தை ஒன்று இருந்துள்ளது. பூனையை துரத்தியபோது சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதனை மீட்க வலை விரித்தபோது அங்கிருந்து சிறுத்தை தப்பியோடியுள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.