‘ஏழைகளின் ஆப்பிள்’ எனப்படும் தக்காளியின் பூர்வீகம் தென் அமெரிக்கா ஆகும். 16-ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த போர்த்துக்கீசியர்கள், தக்காளியை இந்தியாவிற்கு அறிமுகம் செய்து வைத்தனர். உலகம் முழுவதும் 15,000 மேற்பட்ட தக்காளி வகைகளும், இந்தியாவில் 1,000-க்கும் மேற்பட்ட தக்காளி வகைகளும் பயிரிடப்படுகின்றன. 6.75 கோடி டன் உற்பத்தியுடன் தக்காளி உற்பத்தியில் முதலிடத்தில் சீனாவும், 2.11 கோடி டன் உற்பத்தியுடன் இந்தியா 2-வது இடத்திலும் உள்ளது.