குன்னம் - Kunnam

பெரம்பலூர்: வாலீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா

பெரம்பலூர்: வாலீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, வாலிகண்டபுரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவிலில் நேற்று அன்னாபிஷேக விழா நடைபெற்றது.  நேற்று மாலை நடந்த பூஜையில் 1008 கிலோ அரிசியை சாதமாக சமைத்து மூலவர் வாலீஸ்வரருக்கு சாற்றப்பட்டது. பின்னர் மூலவருக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

வீடியோஸ்


பெரம்பலூர்