கோவைக்கு சென்ற தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்திக்க மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த மேஜையின் மீது விஜய்யின் தவெக கொடியின் நிறத்தை ஒத்த துணி விரிக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட அதிகாரிகள் அந்த துணியை உடனே அகற்றக்கூறியதையடுத்து அது அகற்றப்பட்டது.