இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்!
44 நாடுகளில் செய்த ஆராய்ச்சியில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு குறித்த அறிக்கையை நோர்டுபாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், உலகளவில் '123456' என்ற பாஸ்வேர்டை 3,018,050 பேர் பயன்படுத்துவதாகவும், இதில் 76,981 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இரண்டாவதாக 'PASSWORD' என்ற ஆங்கில வார்த்தையையே PASSWORD ஆகப் பலர் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளது.