இயக்குனரும், சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன், கங்குவா படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் பயன்படுத்திய இசைக்கருவிகள் இதுதான் என ஒரு படத்தினைப் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அது பாத்திரங்கள் விற்கும் கடையின் புகைப்படம். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். படம் பார்த்த ரசிகர்கள் பலரும் கங்குவா படத்தின் பின்னணி இசையையும் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.