வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த இரண்டு டி20களிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 3வது போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடியது. இந்நிலையில், முதல் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 17.1 ஓவரில் விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19.2 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்து தொடரை கைப்பற்றி வெற்றிபெற்றது.