சூர்யா நடிப்பில் வெளியான "கங்குவா" படம் குறித்த நெகட்டிவ் விமர்சனத்தையடுத்து, இது போன்ற பிரபலமான படங்களில் ஒலி பற்றிய விமர்சனத்தைப் பார்ப்பது மனவருத்தமாக இருக்கிறது என ஆஸ்கர் விருது வென்ற இந்திய சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இது யாருடைய குற்றம்? என ஒலி கலைஞர்கள் நாம் கேள்வி எழுப்ப வேண்டும். பார்வையாளர்கள் தலை வலியுடன் வெளியேறினால் எந்தப் படத்துக்கும் ரிப்பீட் வேல்யூ இருக்காது என கூறியுள்ளார்.