அரியலூரில் பல திட்டங்களை தொடங்கிய முதலமைச்சருக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், “அரியலூரில் இன்னும் கட்டமைப்பு வசதிகள் வலுப்பெறவில்லை, திமுக ஆட்சியில் தான் இந்த மாவட்டம் முழுமையான கவனிப்புக்குள் வந்துள்ளது. தொழில் வளர்ச்சிக்கும் தற்போது காலணி தொழிற்சாலைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். இது பெருமையாக உள்ளது. இதற்காக முதலமைச்சருக்கு, நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.