புரதம் சாப்பிடுவது உடல் எடையைப் பொறுத்து மாறுபடும். சராசரி வயது வந்தவருக்கு, உடல் எடையில் புரதம் 0.83 கிராம்/கிலோ ஆகும். 70 கிலோ எடையுள்ள ஒருவர் தினமும் 58 கிராம் புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது 200 கிராம் கோழி இறைச்சியை உட்கொள்வதற்கு சமம். உணவில் புரதத்தின் அளவை அதிகரிக்க இறைச்சி, முட்டை, பால், மீன், பருப்பு வகைகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இன்சுலின் போன்ற அத்தியாவசியமான ஹார்மோன்கள் உற்பத்திக்கு புரதம் மிக அவசியம்.