வயநாட்டில் ஏற்பட்ட முண்டகை, சூரல்மலை நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசு மறுத்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய், டெல்லியில் உள்ள கேரள சிறப்பு பிரதிநிதி கே.வி.தாமஸுக்கு கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளார். கேரளாவின் கைகளில் போதுமான மாநில பேரிடர் நிவாரண நிதி இருப்பதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய அரசு ஏற்கனவே ஒதுக்கியுள்ள நிதியில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க கூறியுள்ளது.