கேரளா: திருச்சூரில் போலீஸ் உடையில் பணம் பறிக்க முயன்று சைபர் செல்லுக்கு வீடியோகால் செய்து மாட்டிக் கொண்ட திருடனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பக்கா காவல் நிலைய செட்டப் உடன், டிஜிட்டல் திருடன் எதர்ச்சையாக சைபர் செல் காவலருக்கே வீடியோ கால் செய்துள்ளான். முதலில் கேமராவை ஆஃப் செய்த காவலர், "என் கேமரா சரியாக வேலை செய்யவில்லை சார்" என்று பதிலளித்தார். காவலர் கேமராவை ஆன் செய்த பின் அத்திருடன் செய்வதறியாது விழித்துள்ளான். இதையடுத்து, அத்திருடன் கைது செய்யப்பட்டான்.