நிறம் மாறிய முருங்கையால் விலை வீழ்ச்சி: கவலையில் விவசாயிகள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள செட்டியபட்டி, தொட்டப்பநாயக்கனுார், வெள்ளைமலைப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் முருங்கை அதிகளவில் சாகுபடியாகிறது. இப்பகுதியில் தொடர் மழையால் முருங்கை பூக்கள் உதிர்ந்தும், காய்கள் பச்சை நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாக மாறியும் காய்க்கிறது. இதனால் கடந்த வாரம் கிலோ ரூ.80-க்கு விற்ற முருங்கை தற்போது கிலோ ரூ.10-க்கு விற்பனையாவது விவசாயிகளுக்கு கவலையை கொடுத்துள்ளது.