பட்டப்படிப்பு முடித்தவர்கள் அரசுப் பணி அல்லது உயர் பணிகளில் சேர்வதற்கு கல்விச் சான்றிதழ்கள் சமர்பிக்க வேண்டும். இந்த சான்றிதழ்கள் உண்மையானது தானா என்பதற்கு பல்கலைக்கழகங்களில் உண்மைத் தன்மை சான்று பெற வேண்டும். இனி இந்த ‘உண்மைத் தன்மை சான்று’ பெறுவதற்கு ரூ.1,000 கட்டணம் வசூலிக்க கூடாது என யு.ஜி.சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு தேர்வுகளுக்கு படித்துக் கொண்டிருப்பவர்கள் வரவேற்றுள்ளனர்.