காமரங்கா எனப்படும் ஸ்டார் ஃபுரூட்டானது இந்தியாவிலும் தென் கிழக்கு ஆசியாவிலும் காணப்படுகிறது. இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்ட பழம் இது. இதில் வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள் அடங்கியுள்ளன. பார்மகாலஜிகல் சயின்சஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவு ஒன்றில் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் காமரங்கா பழத்திற்க்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செரிமானத்திற்கும் உதவுகிறது.