தவெக தலைவர் விஜய், ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு தரப்படும் என கூறியது பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் நேற்று (நவ. 03) செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு, “2026 தேர்தலில் இபிஎஸ் முதல்வராவார். கூட்டணி மற்றும் கூட்டணி ஆட்சி குறித்து பேசும் அதிகாரம் அவருக்கு தான் உள்ளது. எது சாத்தியம், சாத்தியமில்லை என்பதை இபிஸ் அறிவிப்பார்” என்றார்.