கேரளாவின் திருச்சூரில் தங்கமணி (74) என்ற மூதாட்டி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். நேற்று (நவ. 03) மூதாட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டனர். பின்னர் அவரிடம் இருந்த ரூ. 2000 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. 500 பணத்தை திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது.