கடல் தாவரங்கள், கடல் பாசிகளை உண்டு வாழ்வதால் அபரிமிதமான சுவையுடன் விளங்குகிறது மஞ்சள் பாறை மீன். இந்த மீன்களில் ஒமேகா-3, வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் கால்சியம், பாஸ்பரஸ் எலும்புகளை வலுவாக்குகிறது. தொடர்ந்து சாப்பிட்டால் மூளை, நரம்பு நோய்கள், மன அழுத்தம், முடி உதிர்தல், ஆஸ்துமா ஆகிய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. கண் பார்வையை அதிகரிக்கிறது. கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.