ம.பி: ரேவாவில் ரத்தத்தை உறைய வைக்கும் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ராம்பாபு வர்மா என்ற நபர் தனது முதல் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் 2-வது திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் மனைவி ஜெயா (26) மற்றும் இரண்டாவது மனைவி மான்சி (22) இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு உச்சகட்டத்தை எட்டியதால், ராம்பாபுவின் 2-வது மனைவி மான்சி முதல் மனைவி ஜெயாவை 50 முறை கத்தியால் குத்தி கொன்றுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.