வயநாடு மக்களவைத் தொகுதியில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். பரப்புரையில் உரையாற்றி அவர், "எங்கள் தந்தை கொலை வழக்கில் உட்படுத்தப்பட்ட நளினியை சந்தித்து ஆரத் தழுவியவர் பிரியங்கா காந்தி. அதன் பின்னர் என்னிடம் வந்து, நளினி குறித்து மிகுந்த வேதனைப்படுவதாக தெரிவித்தார். என்னைப் பொறுத்த வரையில் இதுபோன்ற மன்னிக்கின்ற அரசியல்தான் இப்போதைக்கு இந்தியாவுக்குத் தேவை" என்று கூறியுள்ளார்.