நாகப்பட்டினத்தில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு நேற்று (நவ. 03) அரசு பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் சாலையை சரிவர கவனிக்காமல் செல்போனில் வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்தபடியே ஓட்டினார். இதை சில பயணிகள் செல்போனில் வீடியோவாக எடுத்து வெளியிட சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.