

விருதுநகர்: வரலாற்றுப் பயணம் நூலை வெளியிட்ட அமைச்சர்
விருதுநகர் மாவட்டம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்-ஒரு வரலாற்றுப் பயணம் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, பொருநை நாகரிகத்திற்கு முன்பே வைப்பாற்று நாகரிகம் இருந்தது என்பதை வெம்பக்கோட்டை அகழாய்வு நிரூபிக்கிறது என்றார். விருதுநகர் மாவட்டம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்-ஒரு வரலாற்றுப் பயணம் எனும் நூலை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். விருதுநகர் மாவட்டம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம், ஒரு வரலாற்றுப் பயணம் எனும் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நூலை வெளியிட, அதனை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெற்றுக் கொண்டார். இந்நூல் 25 கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்களால் முதல் நிலைச் சான்றுகளைக் கொண்டு ஒரே ஆண்டில் எழுதப்பட்டுள்ளது. 540 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் 23 கட்டுரைகள் உள்ளன. இது, அரசு ஆவணக் குறிப்புகள், ஆய்வேடுகள், அரசு ஆவணக் காப்பகம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.