விருதுநகர்: புதிய கட்டிடங்களுக்கான பூமி பூஜை; தொடங்கி வைத்த அமைச்சர்

58பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்கள் படித்து வருகின்றனர். இங்கு போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் சில மாதங்களுக்கு முன்பு பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டுமென்று பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.

நபார்டு திட்டத்தின் கீழ் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதியதாக 10 வகுப்பறை கட்டிடம் சுமார் 2 கோடி 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி, பூமி பூஜையினை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். அப்போது மாணவிகளை அழைத்து அவர்கள் கையாலேயே பூமி பூஜை செய்ய சொல்லி அழகு பார்த்தார். பின்னர் பள்ளி வகுப்பறை கட்டிடங்களை தரமாக கட்ட வேண்டும் என்றும், வேலைகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டார்.

முன்னதாக பள்ளிக்கு வருகை தந்த நிதி அமைச்சரை மாணவிகள் ரோஜா பூ கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து பி. புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக ஆய்வக கட்டிடம் கட்டும் பணிகளை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பூமி பூஜை செய்தும், அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி