விருதுநகர் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் அருகே அருள்மிகு ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெள்ளையங்கிரி ஆண்டவருக்கு தை மகாலயா அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று (ஜனவரி 29) காலை முதல் சிவகாசி மற்றும் அதன் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஸ்ரீ வெள்ளையங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து வருகின்றனர்.