லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பலி

70பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே எஸ். கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது மனைவி மகேஸ்வரி (32) என்பவர் இல்லம் தேடி கல்வி மாலை நேர கல்வி மைய ஆசிரியராக பணிபுரிந்து பின்னர் அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் கணினி இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.
கம்பிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று பள்ளி மாணவர்களின் தரவுகளை கணினியில் பதிவேற்றம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எஸ். கல்லுப்பட்டி பகுதிகளில் சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால் எதிர் எதிரே வாகனங்கள் வந்து கொண்டிருந்தது. மகாராஜா என்பவர் மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி லாரியை ஓட்டி சென்ற போது எதிர்பாராத விதமாக மகேஸ்வரி மீது மோதியதில் மகேஸ்வரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால் கடந்த மாதம் இதே பகுதியில் இதை ஊரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் இப்பகுதியில் தொடர் விபத்து நடைபெறுவதால் ஆத்திரமடைந்த எஸ். கல்லுப்பட்டி கிராமமக்கள் மகேஸ்வரியின் உறவினர்கள் நான்கு வழிச்சாலையில் கற்களை வைத்து சாலையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை ஏ. எஸ். பி மதிவாணன் தலைமையிலான போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இப்பகுதியில் பேரிக்காடு அமைக்க ஏற்பாடு செய்தனர்.
மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி