காரியாபட்டி அருகே தர்மாபுரம், வெற்றிலை முருகன்பட்டி, அல்லாளப்பேரி, சாலை மறைக்குளம், ஆவியூர், அரசகுளம், உடுப்புகுளம் போன்ற பல்வேறு கிராமங்களில் பகுதிநேர நியாய விலை கடை மற்றும் நியாய விலை கடை, சமுதாயக்கூடம் உள்ளிட்ட சுமார் 2 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழக நிதி சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசு அலுவலர்கள் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் சிறுவர்கள் போட்டி போட்டு அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். காரியாபட்டி வருவாய் வட்டாட்சியர், டிஎஸ் ஓ உள்ளிட்ட அதிகாரிகள், ஒன்றிய செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.