மும்பை அணியில் களமிறங்கும் பும்ரா.. பயிற்சியாளர் அறிவிப்பு

71பார்த்தது
மும்பை அணியில் களமிறங்கும் பும்ரா.. பயிற்சியாளர் அறிவிப்பு
ஐபிஎல் தொடரில், மும்பை அணி 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இதனால் காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் பும்ராவை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் தற்போது முழுவதுமாக குணமடைந்த பும்ரா மும்பை அணியுடன் இணைந்துள்ளார். இருப்பினும் அவர் பெங்களூருவுக்கு எதிரான நாளைய போட்டியில் களமிறங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் பும்ரா களமிறங்குவார் என மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி