மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். அந்த போராட்டத்தில், தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். குத்தகை விவசாயிகள் சாகுபடி உரிமையை உறுதிப்படுத்தி அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளனர்.