விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் முதல் சாலை விரிவாக்கத்திட்டம் இது என்றும் தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் சாலை விரிவாக்கப் பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்றும் குறிப்பாக கிராமங்கள் அதிகம் உள்ள திருச்சுழி தொகுதியில் 103 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்க 121.11 கோடி மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது என்றார். ஒவ்வொரு நாளும் நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார் என்றும் இந்த நிதிநிலை அறிக்கை பெண்கள், மாணவர்கள் என அனைவருக்குமான நிதிநிலை அறிக்கையாக உள்ளது என்றார்.