விருதுநகர்: டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம்

85பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மதுரை மண்டல அளவிலான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் பாலுசாமி மற்றும் 10 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும் மதுரை மண்டல அளவிலான செயற்குழு கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும் செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் மாநில தலைவர் பாலுசாமி தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பாகப் பேசப்படுவது டாஸ்மாக்கில் ED நடத்திய சோதனை தான் என்றார். அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையின் மூலம் 1000 கோடி ஊழல் விவகாரம் வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரச்சாரமாக இருக்கும் என்றார்.

 மாநிலத் தலைவர் தமிழகத்தில் டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 21 ஆண்டுகளாக ஊதிய உயர்வு அளிக்காத காரணத்தினால் தான் குடும்ப சூழல் காரணமாக டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவிற்கு விலையை விடக் கூடுதலாகப் பத்து ரூபாய் வாங்குகிறார்கள் என்றார். இந்தப் பத்து ரூபாய் குற்றச்சாட்டை ஒழிக்க வேண்டுமென்றால் டாஸ்மாக் பணியாளர்களுக்கு முறையான ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி