பாமக சார்பில்தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது

54பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஆவியூர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் காரியாபட்டி ஒன்றியச் செயலாளர் பாண்டிச் சாமி, மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்முகவேல்சாமி முன்னிலையில் கிராம பொது மக்களுக்கு அரசியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது

இந்த பிரச்சாரக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா அவர்கள் அரசியல் கொடுத்தும் அரசியல் சார்ந்த புரிதல் குறித்தும் பொதுமக்களிடையே எடுத்துரைத்தார்.

மேலும் அங்கிருந்த பொதுமக்கள் தங்களது கிராமத்தில் குடிநீர் வசதி இல்லை என்றும் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும் கூறினார்கள் உடனடியாக இந்த பிரச்சனையை காரியாபட்டி பேரூராட்சிஅலுவலகத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்க தீர்வு காணப்படும் என்று உறுதிமொழி அளித்தார்

இந்த தெருமுனை பிரச்சாரக்கூட்டத்தில் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி