மண் அல்ல எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்

69பார்த்தது
*காரியாபட்டி அருகே கிராவல் குவாரியில் மணல் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு - குவாரி உரிமைதாரர்கள் மற்றும் கிராம மக்களிடையே தள்ளு முள்ளு மணல் அள்றிய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்ததையும் மீறி லாரி இயக்கப்பட்டதால் பரபரப்பு*


தள்ளு -முள்ளில் ஏழு பேர் படுகாயம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா, கொட்டங்குளம் கிராமத்தில் தனியார் இடத்தில் கிராவல் மண் எடுப்பதற்கு கனிம வளத்துறை அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் அனுமதி அளித்துள்ள இடத்தில் மண் அள்ளுவதற்கு பொக்லைன், லாரியோடு மண் அள்ளிக் கொண்டிருந்தபோது அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மணல் அள்ளிய லாரியை பொது மக்கள் சிறை பிடித்தனார் அதையும் மீறி லாரி ஒட்டுனர் லாரியை முன் னோக்கி இயக்கியதால்
பரப்பரப்பு ஏற்பட்டது இதில் அர்ச்சுணன் (40) பஞ்சு (50) மேலும் 4 பேரும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதில்
அர்ச்சுணன், பஞ்சு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காரியபட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி