புரட்டாசி மாத பிரதோஷம்; குவிந்த பக்தர்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அதன் சுற்று பகுதியிலிருக்கும் சிவன் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷ விழா அதிவிமர்ச்சியாக கொண்டப்பட்டன. பக்தர்கள் கொண்டு வந்த காணிக்கை பொருளான இளநீர், பால், தயிர், மஞ்சள், பன்னீர், சந்தனம் மற்றும் வாசன திரவியங்களை கொண்டு நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நந்தி பகவானுக்கு சந்தனகாப்பு வைத்து வெள்ளி கவசம் அணிந்து வண்ண, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த பிரதோஷ விழாவில், சிவன் பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வணங்கி சென்றனர்.