திருச்சுழி - Tiruchuli

தாக்கிய 9 பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவை சார்ந்தவர் கார்த்தியை செல்வன் இவருக்கும் அதே பகுதியை சார்ந்த சந்துரு என்பவருக்கும் இடையே முன்பாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது அதை மனதில் வைத்துக்கொண்டு மல்லாங்கினறு தபால் அலுவலகம் முன்பு வந்து கொண்டிருந்த கார்த்திகை செல்வனை சந்துரு ராஜேந்திரன் அருள்முருகன் முனியாண்டி முத்துச்சாமி சுந்தரலிங்கம் அருண் சந்திரன் ஜெயக்குமார் ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது கார்த்திகை செல்வனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

வீடியோஸ்


விருதுநகர்
Nov 04, 2024, 09:11 IST/ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவி: நகராட்சியை கண்டித்து கம்யூனிஸ்ட் போராட்டம்

Nov 04, 2024, 09:11 IST
ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம். விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. ஶ்ரீவில்லிபுத்தூர் நகரில் பல்வேறு இடங்களில் உள்ள குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்ய வேண்டும், இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், முன்னறிவிப்பு இன்றி 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தியது, சொத்து வரிக்கு அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும், பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறையை தூய்மை படுத்தி பராமரிக்க வேண்டும், கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சுகாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் ஜெயக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.