தமிழகத்தில் ஆதி திராவிடர்களின் காலிமனைகளை கண்டறிந்து, தகுதியானவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வருவாய் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இலவச வீட்டு மனை பட்டா அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தயார் செய்து விடுபட்டு போன வீட்டுமனை பட்டாக்களும் உள்ளன. அவற்றை மீண்டும் உரியவர்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.