விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காட்டு பாவா தெற்கு தெருவில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஷபிக் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில செயலாளர் அல் அமீன் கலந்து கொண்டு வக்பு வாரிய திருத்த சட்டத்தில் மோசடிகள் உள்ளதாக பாஜக அரசை கண்டித்து பேசினார். மேலும் வக்பு வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை கொண்டுவரும் மத்திய பாஜக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் ரியாஸ் தீர்மானங்களை வசித்தார். மேலும் மாநில செயலாளர் முஹம்மது ரபீக் விருதுநகர் மாவட்ட மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார்.