விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நெசவாளர் காலணியில் அதிமுக நகர செயலாளர் சோலை சேதுபதி ஏற்பாட்டில் நகர அதிமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ராஜவர்மன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நகர அதிமுக நிர்வாகிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் உள்ளிட்ட தீபாவளி பரிசுகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியின் போது பேசிய விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ரவிச்சந்திரன்,
அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடியார் மக்களுக்கு தேவையான பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால் தற்போது திமுக அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்திக் கொண்டுள்ளது. வரப் போகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி மலரும். தொண்டர்கள் அதற்காக தீவிரமாக உழைக்க வேண்டும் என பேசினார்.
இதில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்