விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மறையூர் கிராமத்தில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர் திருவுருவச் சிலைகளுக்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர். கே. ரவிச்சந்திரன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மருதுபாண்டியர் திருக்கோவிலில் மாவட்ட செயலாளர் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து மறையூர் கிராமத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவச் சிலைகளுக்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர். கே. ரவிச்சந்திரன் தலைமையிலும், நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் முன்னிலையிலும் அதிமுகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவை இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான M. S. R. ராஜவர்மன், நரிக்குடி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மணிமேகலை, சுப்பிரமணியன், சிவசாமி மற்றும் நரிக்குடி, திருச்சுழி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு மாமன்னர் மருதுபாண்டியர்களின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.