மறுவாழ்வு இல்லங்கள் பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும்.

71பார்த்தது
விருதுநகர் மாவட்டம் முழுவதும் குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இல்லங்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறையின் மூலம் பதிவு மற்றும்; உரிமம் பெறுவதற்கான சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும்.
எனவே, இதன்படி பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகள் உடனடியாக மேற்காணும் இணையத்;தளம் (Portal) /அலுவலகம் வாயிலாக ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இவ்வில்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி